0

மகாலட்சுமி சுவாமிநாதன்

மகாலட்சுமி சுவாமிநாதன்

            அரு.நலவேந்தன்

   

                                                நான் 1

 

        நீண்ட மனத்தேடலுக்குப் பின்  இமைகளை அசைத்தேன்.இருண்ட தேசத்தில் புலம்படாத  பிம்பங்கள் தோன்றி மறைந்தன.கண்களை மெல்ல திறந்தேன்.வெள்ளை பிரகாசம் கன்னத்தை  அறைந்து,கருவிழி ஆங்காங்கே சிதறியது.இடத்தை புரிந்து கொள்ளவில்லை அசுரத்தனமான வலி முகப்பகுதியிலிருந்து வருவாதாகப் பிரக்ஞை உறுத்தியது.கைகளை இருக்கிக்கொண்டேன்.கால்களை  மேல் நோக்கி இழுத்தேன். வாய்  திறந்து கத்தமுடியவில்லை. கண்களை இருக்கி மூடிக்கொண்டேன்.மூக்கினால் முக்கினேன்.பக்கத்தில் ஓர் உருவம் தோன்றி பிரசங்கித்தது.வெள்ளைச் சீருடை. ஊசியால் குத்துகிற  வலி. விழிகளின் வாசல் மூடின.

   *                   *                    *

                   அவள் 3

அவள் தோற்றுவிட்டாள்.அவள் முயற்சி கானல் நீராகியது..யாரும் அவளின்குரலை கேட்கவில்லை இந்த நிர்த்தாட்சண்ய உலகத்தில்.இறுதியாக பிரமாஸ்தரம் பிரதிவாதத்துக்கும் பயனானது.அசௌகரியத்துடன் தெருவில் பயணம்.சமுதாயத்திலும்  இளைய திலகங்களும் வெறுமென,அவளின் அங்க அசைவுகள்.கோயில் தெருவில் மணியோசை எதையோ போதித்தது.இறைவனின் நல்லாசி வழங்குவதாக மனதில் பிரதிஷ்டைசெய்தது.அவனின் நெஞ்சாங்கூட்டில் முகம் புதைக்க வேண்டும் என்றது மனம்.கண்களின் ஈரக்கலனை சேலை முந்தானையில் சேமித்த நிமிடம்.

          செல்பேசியின் சினுங்கள் , கங்கா அக்காவின் பெயரை பார்த்து கண்ணில் கலனின் வருகை அதிகரிக்க பேச்சை ஆரம்பித்தாள்.அக்கா சொன்னதை  தாரகமாய்க் கொண்டு,நடையை மெதுவாக ஒரு  மூத்திர சந்துக்கிடையில் நடந்ததால் மூக்கைச்சிந்தி சுவற்றில் தேய்த்துக்கொண்டே. அந்தச் சந்துக்கு இவளது தொடர்பு அதிகம்.இவள் வீட்டில் இருந்த நிமிடங்கள் சந்துகளில் வாசமித்த நிமிடங்கள் மிகையானதே.அவன் உறவும் இதுபோல ஒரு சந்துலிருந்து ஆரமித்ததுதான்.

          நிலவு மெல்ல அவளின் புற அழகை வர்ணித்திருந்தது.சத்தம் முடிந்து சாலை விளக்கு மெல்ல எரியும் தெருவில் பயணித்தால் ஒரு இன்ப நுகர்வோடு.எங்கும் இளங்கொசுகளின் கண்களில் கிளர்ச்சி பிணைந்த காமவிழிகள்.இவளைக் கற்பழிப்பு நடைவடிக்கை  பிரதிமையுடன்.கூட்ட  நெரிசலில் முட்டி மோதும் நிர்பந்தத்தில் அவளின் அருகில் ஸ்பரிசித்துக் கொண்டியிருந்தன இளசுகள்.என்றும் இல்லாத முகமூடியை மாட்டிருப்பதால் பல பெண் இன்பர்களுக்கு இவளின் மனதை புரிதல் இன்றி வினவினர் பதில் மௌனமாகிருந்தது.

         சேற்றுக்கரையைப் படிந்த விடுதியின் வாசல் படிக்கட்டில் .முகத்தில் அறை விடும் மல்லிகைச் செண்டு வாசம்.வர்ணஜாலங்களாய்த் தோழிகளின் உடல் அலங்காரம்.ஆண்களின் படையெடுப்பில்லாதக் கங்கா அக்காவின் பிரத்தியேக மாடி.வேகம் நடையில் பற்றிக்கொண்டது. “சாத்தானின் வாழும் இடமான இந்த உலகில் கடவுள் எங்குமேஇல்லை மனிதர்களிடமும்தான்.ஆலயங்கள் வெறும் கூத்தடிக்கும் சமுதாயினர்களுக்குக் கொட்டகை.பெண்கள் அங்கே வெறும் காமக்களியாட்ட பொம்மைகள்.விழிகளாலே பெண்களைக் கற்பழிக்கிறார்கள்.அங்கங்கள் இறைவன் எல்லா உயிர்வாசிகளுக்கும் படைத்தியிருக்கிறார்.அதென்னஆண்கள் பலரது கண்கள் பெண்களின் மர்ம உருபுகளை இச்சையின்பத்துடன் நோக்குவது பெரும்பாலும் நம்மவர்கள் இதில் மறுக்க முடியாத ஏற்றம்.அறையின் கதவுகள் திறந்திரப்பதனால் அக்காவின் எழுச்சி கலந்துரையாடலின் கருத்துகள் வெடித்து சிதறிக்கொண்டு இருந்தன.

       அக்காவின் நெருங்கிய தோழிகள் அங்கே அடைக்கலம்.அவளின் குமுறலுக்கு ஆறுதலை நீராக வார்த்து கொண்டியிருந்தால்.அவளின் முகம் சற்று தெளிவுற்றியிருந்தது.அக்கா ஆயுத்தமானால் நானும் முகம் கழுவிக் கொண்டு.வாகனம் ஓட்டுவது அக்காவுக்குப் பிடிக்காது.பயணிப்பதும் தான்.முடிந்தளவு கால்களே சக்கரமாகிக் கொள்வாள்.ஆண்களின் மேல் நம்பிக்கை இல்லை.ஆனால்,பரிவுகாட்டுவார் ஆண் பிச்சைக்காரர்களுக்கு மட்டும்.தேடி வந்து உதவிக்கேட்பவர்க்கு இவள் தெய்வம்.அக்காவின் புகழ் சில சமுதாயச் சுடர்களுக்கு மட்மே  விதிவிலக்கு.ஓட்டுனர் ஒரு பெண்.வாகனம் சாலையில் சற்று பொறுமை இழக்கவும் அக்காவின் சொற்களும் ஆவேசமாய்.

*                       *                        *                                                               

                                                   அவள்  2

         இன்றோடு நம் காதல் இறந்து விட்டது.வெண்பனிக்காலங்களில் அவனோடு வாசமித்த காலங்கள்,அவனின் மௌனமான கண்கள்,தாரகமாய் அவன் பெயரின் தியானம்,விழிகளின் உரையாடல்,உதடுகளின் கட்டிப்பிடிப்பு, உடையளங்காரம்,உள்ளலங்காரம்,நிர்வாணக்குளியளில் சவுக்கார நுரையில் அங்கங்களில் அவன்பெயரின் பச்சைக்குத்தல்,திரையரங்கு கிளர்ச்சிகள்,புகைப்பட வேட்கைகள்,துணிந்து கட்டிய தாலி,காலையில் விடுதியில் நடந்த முதலிரவு,அம்மாவிடம் கிடைத்த மஞ்சள் அழியாத மாங்கல்யம்.,அப்பாவின் விஷ்வரூபம்,எனது ஆவேச அபிநயம்,அம்மாவின் தற்கொலை முயற்சி,கண்ணீராய் உறைந்த நிமிடம்,உன்னுடன் சண்டை,நீயும்  என் தந்தையும் நடுரோட்டில்  நடத்திய  அவதார தாண்டம்,இருவரின் கால்களை இழுத்துப்பிடித்து கெஞ்சிய வினாடி,அப்பாவிடம் அறை உன்னிடம் அசுத்த வசனம் ,அனைத்தையும் கடந்து,இன்றும் இறைவனின் மேலிருந்த நம்பிக்கை மெல்ல கருக்கிக் கொண்டும்.உன் அழகிய முகத்தை இழிசெய்தது விபத்து என்ற போர்வைக்குள் நடந்த கொலைச்சம்பவம்.

        இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னை அழித்துவிடுமாறு.காரணம் எப்படி  சொல்வேன்  தந்தையின் மிரட்டலுக்காக உன்னை பயன்படுத்தி நம்மை கூறுபோட்ட சதிச்செயலை.இதில்இருக்கும் மாங்கல்யத்தை உனது மனைவிக்கு வேலியாகட்டும் இது எனது வேண்டுகோள்,இந்த கடிதத்தை நீ படித்து முடிக்கும் முன் நான் உன்னை வந்து சேர்ந்திருப்பேன் உன் சுவாசக்காற்றாக மாறியிருப்பேன்.

      “அவரை தொந்தரவு செய்யாதீர்கள்” உலகில் எல்லா மருத்துவர்களின்  மறைக்க முடியாத வசனம்.அதை என்னிடம் சொன்னபோது மனம் ரணமாகியிருந்தது.மூன்று நாட்களுக்குப் பின் இப்பொழுது தான்  உனது சரிரத்தை பார்க்கிறேன்.பரவாயில்லை  என் தந்தையின்  துரோகச்செயலுக்கும் அவரின் ஈனகுலத்தில் பிறந்தமைக்கும்  இறைவன் நல்கிய பரிசாகக் கருதுகிறேன்.ஒரு தாதியினரிம் நான் எழுதிய கடிதத்தை அவரது மெத்தையின் கீழ்வைத்து விடுமாறு கெஞ்சினேன்.அவள் மறுத்து இசைந்தால்.மருத்துவமனையின் வாசலில் நின்ற போது மனம் வெம்பியது.வானம் மெல்ல கருக்க ஆரமித்தது.சில்லென்ற காற்று பாவடையின் கீழிகுக்கும் கால்களின் ரோமங்கள் நர்தனம்.துக்கம் கண்களை மறைத்ததும் மெல்லிய சுகங்களை மனம் மறந்து துயரத்துடன் வாகனத்தில் ஏறினேன்.அப்பா என்னைப்பார்க்கவில்லை நானும்.

        என்னுடைய கைநாடியை இருக்கியும் மருந்தின் செயல் சற்று வேகமாக வேண்டும் என்று இறைவனை வேண்டினேன்.வாகனத்தின்  எதிர்பாராத நிறுத்தம், முன் வந்த காரின்  வேகம்.தவறு அவருடைய கவனக்குறைவு இல்லை  ஆனால்,அப்பா திட்டினார் ஓட்டுனரை.அவருக்குப் பழக்கமானதால் ,காரை இடதுப்பக்கம் வளைத்து செல்லும் கணம், ஒரு  அக்கினிப் பார்வை எதிர்வாகனத்தின் மேல் சிதறியதை நான் கண்டேன். 

                     

                                                  அவள்  3                                               

         நுழையும் கணமே அக்கா எதிர் வாகனத்தை அக்கினிப்புஷ்பங்களால்  அர்ச்சனை செய்தால்.வாகனம் நின்றதும் கதவை லாவகமாகத் திறந்து ரிசப்சனுக்கு கால்கள் ஓடின.அவளா அல்லது அவசரமா புலம் படாதக் கவர்ச்சி உடலில் பரவியது.அவசர சிகிச்சைப் பிரிவில் முதலாம் நம்பர் படுக்கை.உள்ளே செல்ல அனுமதி இல்லாதனால்,கதவின் வட்ட கண்ணாடியில் பார்த்து ,முகத்தில் சுற்றப்பட்ட வெள்ளை துனி கட்டு மிகவும் துயரத்தை அள்ளி தெரித்தது மனப்பூங்காவில்.ஆயிரம் முறை விழிகளால் கண்டு இரசித்து,உதடுகளால் முத்திரை பதித்த சிவந்த கண்ணங்கள் அதற்கு இந்த நிலை.வாரம் தவறாது எங்களின் சந்திப்பு. இன்பப் புணர்வில் சேமித்த அந்த அன்பு வேறு எந்த ஆணுக்கும் வரப்போவதில்லை.

         இறைவன் இருக்கிறார் என்ற கூற்றை மறுக்கமுடியவில்லை இந்த கணம்.அக்காவின் பிடி தளர கதவருகே வேகம் கொள்ள தாதியினரின் வேண்டுகோளுக்காக  மனரீதியில் பிரேதமாய் மண்டியிட்டேன்.திடீர் மருத்துவர்  வருகை பல்வேறு கேள்வி பதிலுக்காக அருகில் செல்ல ,அவர் மறுக்க மனம் மேலும் வெம்பித் தல்லாடி தவிக்க,அவரை ஒரு மாதங்களுக்குப் பக்கத்தில் இருந்த பேணிக்காகும் பொறுப்பை பல கெஞ்சலுடன் பெற்ற தருணம் பெரும் சந்தோஷத்தில் மூழ்கியது மனம்.ஒருமணி நேர தடங்களுக்கு பின் என் கைகள் அவரின் கால்களைப் பற்றி தேம்பியது.மாலையில் ஆலயம் செல்லும் பணி தினக்கடணில் சேர்ந்துக்கொண்டது.சோதிடர்கள் இல்லம்,யோகிகளை மிஞ்சும் விரதம்,108 தேங்கய் பலி,ஆடுகளுக்கு சூரசம்ஹாரம் மேலும் மேலும் பக்தியின் உச்ச வேண்டுதல் என்றும் பேசாத இறைவனுக்கு.

 

 

                                                     நான் 1

 

       முகத்தில் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியது.மருத்துவரின்  கைகள் முகத்தில் உள்ள இடுக்கைகளைத் தகர்த்துக் கொண்டு இருந்தார்.இன்று என் மனைவி வருவாள்  மனக்கதவில் ஊசலாடிக்கொண்டிருந்த கேள்வி.எதிர்ப்பார்த்தது இவளது வருகை.மனம் மறுத்தது. “அவுங்க ஒரு நாள் கூட உங்கள பாக்க வரலயே ஏன் ?” இவள் சொல் பொய்யானதா மெய்யானதா இருக்கலாம் மனதின் குரல்.அசைக்க முடியாத நம்பிக்கை தினமும் கரையத் தொடங்கியது அதவனின் உறக்கம் கண்ணில் கணம்.மெல்லிய மஞ்சள் வாசனை,சிவப்பு சந்தன ஜரிகைப்பட்டு ,மல்லிகை தொங்கும் சடை,நெற்றிப் பட்டை மத்தியில் குங்குமம் அவளின் சரிதம் சாந்தப்படுத்தியது.

       கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றல்,கையில் பிரசாதம்,வலது கை  மோதிர விரலால் ஏதோ ஒரு தெய்வத்தின் மந்திரமோ அல்லது பெயரையோ சொன்னவரு மிகவும் பக்தியுடன் பூசினால்.ஆச்சர்யம் வசனமாய் வர அவள்  புன்னகைத்தால்.நடப்பது பிரமையின் விளையாட்டாக இருக்கலாம்.நம்பிக்கை கரையும் பணி நடந்தது.அகலத் தகடு தட்டு,நீறுத்தி அளவித்த புளுங்கள் சாதம்,அவித்த எண்ணை ஒழுகும் கோழி இறைச்சி,வெந்துப்போனக் காய்கறிப் பிரட்டல்,குளிர் அமர்ந்த குமட்டிப்பழத் துண்டு மத்தியான உணவாக வரவழைக்கப்பட்டது.

       சுற்றும் இதே சத்தான உணவு பல்லிழுத்துக்கொண்டு  இருந்தது.அரை மணி நிமிடங்கள் பின்,தட்டு சந்தமானவருக்குச் சென்றது.பெரும்பாலும் தட்டுகள் காலியாகவும் சிறுபாகம் சாதத்தின் வெளிக் கிடந்தது.பக்கத்தில் பார்வைத்தேன் அரை நூண்றாண்டு கடந்த தேகம் சான்றாக வறட்சியான பிரதேசம் முகம்.முளங்கைகளில் தோல் சுருக்கம் அசுவாசமாயிருந்தது.இடது கால் கட்டுப்போடப்பட்டது.அவள் பேச ஆரமித்தால்.கனவுலகக் கதைகள் அவளின் விருப்பமான படைப்பு.ஏதோ ஒரு ஆங்கில கனவுலகக் கதையை மெய்மறந்து சொல்லிக் கொண்டிருந்தால் நான் ஐக்கியமாகவில்லை.

       அவளின் அங்க அசைவு களையும் முக உணர்ச்சிகளையும் வெருட்டிருந்தேன்.அன்றைய பொழுது போனது புலம்படாத உண்மை.காலைக்கடன் படுக்கையிலே சென்றுயிருந்தது.அவளுக்குச் சிரமத்தைக் கொடுத்துவிட்ட வெட்கம் சூழ்ந்திருந்தது.அவள் புன்னகைத்துக் கொண்டே சுத்தம் செய்தால்.இன்றும் இவள் வருகை எனக்கு இனம்புரியாத  உணர்ச்சி உடலில் உய்த்திருந்தது.மதிய நேரம், தைரியத்தோடு  கேட்டேன்.சிரித்தக்கண்கள் குளமாகின.வீட்டில் நடந்த அரகேற்றம் உச்சமுடிவாக வெளியேற்றமும் இனி என்னோடுதான் என்கிற முடிவு அதிரவைத்தது.

        அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டே கழிவறைப்பக்கம் சென்றுயிருந்தால்.மனைவியின் சொல்லைக் கேட்க மறத்த நிமிடங்கள் பெரும்பாலும் இவளின் மடியில் அடைக்கலமாகும்.காரணம் அறியாதது இவளது காதல்.இரவுப்புணர்ச்சியில் தொடங்கிய உறவு இன்று எனக்கு துணையான அவதாரம்.வேலியாக்கிய மனைவி என்னை மறந்துவிட்டாளோ  விடை அறியா மனம் தவித்தது.தொண்டை அரித்தது,மெல்ல காய்வதாக பிரமை,வலதுப் பக்கத்தில் கட்டிலில் கிழிருந்த  தண்ணீர்ப்புட்டியை சில மூச்சிகளுக்கும் பின்,முதல் மடக்கு செறிவுண்டு  காய்ந்த உதட்டில் நீர்படிந்ததும் கீழுதடு லேசாக எரிந்தது.முக்கால்வாசியும் தீர்ந்துக் கிடந்தது.அவள் இன்னும் வரவில்லை.உதவித்தேவைப்பட்டது.கண்கள் சொருகின.தலையணையை மெல்ல நகர்த்தித் தோதாகப்போடவேண்டும்.கண்களில் வேட்டைக்குப் பின்,நானே இறங்கினேன்.

        இரு கரங்களில் முடியாதனால் வலதுக்கையாலே தலையணையை எடுத்தேன்.பளிச்சென வெள்ளைக் காகித மடிப்பு.திருநீரு பையாக இருக்குமோ என எடுத்துப்பார்தேன்.முனையைப் பிடித்ததனால் சட்டென விழுந்து நெஞ்சை  உளுக்கியது மனைவியின் மாங்கல்யம் அவளது கைப்படிந்த மடல் ஒரு முழுங்களுக்குப் பின் வாசித்தேன்.

  

                                                  அவள் 3

          முகத்தை குளிர் நீரால் அலம்பினேன்.வானம் மெல்ல நனைந்து நெறிகட்டிய மேகக்கூட்டம்சிதறிய  தூவானம்.சாயங்காலத்தின் வாகன நெரிசல்.காக்கை கூட்ட சங்கமம் அடங்கிய நிசப்த தரிசனம்.ஆதவனின் அஸ்தமனம் ஒரு நெருடலை உடலில் பரவியது.அவரின் முகத்தை தரிசிக்கும் தருணத்தை எண்ணிய கணம்.சில்லென்ற தென்றல் முகத்தை வருடியது.கைகளைக் கழுவிவிட்டு சேலை முந்தானையில் துடைத்தேன்.நாளையுடன் வீட்டிற்குத் திரும்பிவிடும் சந்தோஷம் நிகழ்காலத்தின் செயல்பாடுகளால் மனம் மறக்கும் நிர்பந்தம்.கழிவரையின் வாசல் முடிந்து அவரின் இருப்பிடத்துக்குச் செல்கிற தருணத்தில்

          மிகவும் அமைதியான சலனத்தின் உருவமாய் அறை,கோப்புகளின் அமைதியற்ற நிர்மாணம்,செதுக்கிய சிற்பமாக அமர்ந்திருந்தவர் எழுந்துக்கொண்டார் எனது சரிதத்தின் நிழல்.அவர் சொல்லுக்கு மனம் பொறுமை கொண்டு ,கண்களில் துளிகள் படர்ந்தன.முகம் வேர்த்தது.சேலை முந்தானையில் அழுத்தத் துடைத்தேன்.அவரின் அழகிய முகம் சிதைந்தது விதியின் எழுத்து மறைவிற்கான தருணத்தை மனம் ஏங்கியது.இயற்கை கைவிரித்தது செயற்கை விஷ்வரூபம் எடுத்தால் பயன் உண்டு என்றார் மருத்துவர்,அவரின் தொனியில்  தென்பட்டது ஆதாயத்திற்க்கான முய்ற்சி.உதடுகள் துடித்தன,நாக்கு மறுக்கவில்லை,ஒத்துக்கொண்டேன்அவரின் வார்த்தைக்கு அப்பொழுது எங்கேயோ நம்பிக்கைச்சுடர் உருவாகிய பிரமையில்  ஆழ்மனம்.கைகளைப் பிசைந்தேன்,கண்கள் சுவரில் மாற்றப்பட்ட காலண்டரில்.

       வாழ்நாள் முழுவதும் முந்தை விரித்தாலும் வராதத் தொகையை எப்படி புரட்டப்போகிறேன் என மன கருத்து.பிரக்ஞை திரும்ப முன் இருந்த டாக்டர் என் அருகில் நின்றார்.ஏதோ ஒரு அசௌகரியத் தன்மை உணர்ந்தேன் காரணம் தெரிந்து படபடத்தது மனவாசல்.டாக்டரின் கைகள் என்னை கூசச்செய்து ,கையை தட்டி விட்டு முகத்தைப்பார்த்தேன்.பரிவாகஇருக்க வேண்டிய விழிகள் பரிசுத்தம் இழந்து பரிகாசத் தன்மை.பிரத்தியோக  அவரின் கட்டளைகள் இன்றையப்பரிதியின் சாவுக்குப் பின் நடத்தவேண்டும்.கோபப்படமுடியவில்லை,என் மீதான கோபத்தால் அவருக்கு விளைவுகள் கிடைத்துவிடும் என  அஞ்சி அமைதியானேன்.

       அவரின் கண்கள் என்னை  இரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.காற்றாடியின் வீச்சில் சேலை மடிப்பு மெல்ல விலக அவருக்கு இன்பமானது.அறையை விட்டு வெளியே சென்று அக்காவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல பணம் அந்திசாய்வதற்குள் வந்துசேர்ந்தது.ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில்.நோட்டுகளை எண்ண நேரம் இல்லாததால் நேராக கவுண்டரில் கொண்டு போட்டேன். எண்ணிச் சரிச்செய்துக் கொண்டு விவரங்கள் கேட்பதற்காக எனது கண்களை நோக்கினாள்.பெயரைச் சொல்லியும் அடையாளக்கார்ட்டைக் கேட்டால். தயக்கத்துடம் எடுத்து தந்தேன்.

“உங்க பேரு என்ன மேடம் ?”ஆங்கிலத்தில் கேட்டாள்.

“மகாலட்சுமி சுவாமிநாதன்”

“இந்த  அடையாளக்கார்டு உங்களோட இல்லயே யாரோ மனோகரன்  சுவாமிநாதனுப் போட்டிருக்கு” ஆங்கிலத்திலே கேட்டாள்.

“இல்ல  அது என்னோடுதான்”.நானும் ஆங்கிலத்தில்.

 

 

                                                முடிவு